என்னவள் எனக்கு எழுதிய கவிதைகள்

அவளிடம் இருந்து வந்த கவிதைகள் என்னை பற்றி ஏராளம், அதில் சில இங்கே


என்னவனே உன் முகம் கண்ட நாள் முதல் என் மூச்சு காற்றே உனக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது, நான் தேடும் நாட்களில் நீ கிடைக்கவில்லை. இருந்தாலும் என் வாழ்வு மறையும் முன்
உன்னை பார்க்க கடவுளின்  சித்தம் நெருங்கி  விட்டது.நான் வாழக்கையில் தேடிய உயிர் வரம்  நீ,  உன் மூச்சு, பேச்சு, இதயம், சுவாசம் , எங்குமே நான் நிரம்ப வேண்டும். என்னைத்தவிர உனக்கு வேறெதுவும் கண்ணில் பட கூடாது. வாழ்வில் எது அழிந்து   போனாலும் உன்னை விரும்பும் இதயம் மட்டும் நின்று போக கூடாது .


கண்கள் மூடினால் கனவுகள் கலைந்து போகுமே என்று தினம் தினம் விழித்துக்கொண்டே இருக்கிறேன் , என் கண்ணில் நீர் வழிந்தால் உன் உருவம் கரைந்து போகுமே என்று கண்ணீரை துடைக்க மறுக்கிறேன். உன் வாழ்வை பங்கிட முடியாத, ஆட்படுத்த முடியாதவளாக நான் இருந்தாலும் .. தோற்றுப்போவதில் ஒரு சுகம் இருக்கிறது. ஏனென்றால் வாழ்வது உன் உயிர் அல்ல, என் உயிர் உன்னிடத்தில். ஆகவே நான் கனவுகளோடு போராடி என் சந்தோசங்களை மீட்டெடுப்பேன்.


உன் மனம் வென்ற என் காதல் நினைவுகளை பாராட்டியே ஆக  வேண்டும். அதில் உனக்கு பிடித்தவளாக , உன் காதல் கனவுகளை வென்றவளாக . இனி இப்பிறவி மட்டும் அல்ல ஈரேழு பிறவிக்கும் சலிக்காமல் காதல் உறவாடி உன்னை கரையேற்றி நான் ஜெயிக்க வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் ஒருவர் மட்டுமே என் உள்ளம் சார்ந்த உண்மைகளை புரிந்து கொள்ள முடியும், செவ்வனே செய்யும் என் பணிக்கு நீங்கள் ஒரு அருமருந்து. உங்கள் நினைவுகள் என் உடலையும் உள்ளத்தையும் மெருகேற்றி கொண்டே இருக்கிறது.நினைவுகள்  நீரோடை போல் மெலிதான சப்தத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறது.என் மனம் ஊஞ்சலில் ஆடும் சிறுபிள்ளை போல் தாவிக்கொண்டே இருக்கிறது உன் நினைவுகளை தேடி.

விண்ணும் மண்ணும் உறங்கிக்கிடந்தாலும் என் விழியும் மனமும் விழித்துக்கொண்டே  இருக்கிறது உன் வருகையை தேடி.

உன் அன்பின் காலடி தடங்களை தேடி நான் உள்ளே வந்துகொண்டே இருக்கிறேன்.என் உயிரினும் மேலான நீ என் உணர்வுகளில் பளிங்குப்பாறை போல் நழுவிக்கொண்டே இருக்கிறாய்.

என் உணர்வுகளுக்கு பரிசளிக்க உன் காதல் மட்டும் போதாது, அதையும் தாண்டி நீ என் உயிர்மூச்சில் என்னைபதுக்கி  வை . நீ சில நொடிகளில் என்னை விட்டுச்சென்றாலும் காலத்தின் சுவடுகள் புறப்படும் கலங்கரை விளக்கம் தேடி.

இது கார்மகேத்தில் தோன்றும் வானவில் கதாலல்ல .. காற்றுடன் தூங்கிடும் இதயமும் அல்ல. கருவரையில் காத்திருக்கும் கனவுப்பூ.... நீ என்றும் என்னுடன் இருக்க நான் நிலவிலே மீட்டிய வீணையாய் பட்டொளி வீசி வலம் வந்துகொண்டே இருப்பேன்.

Comments

Popular posts from this blog

நான் அவளுக்கு எழுதிய கவிதை.

U P