ஆனாலும் என் மனசு கேர்க்கவில்லயடி கண்ணே , உண்ணவளை பார்த்தா இப்படி சொன்னாய் என்று உள் மனது என்னிடம் போராடுகிறது. நானும் அறிந்தேன் என்னவளே உன்னிடம் தெரிந்தும் தெரியாமலும் நான் அப்படி சொல்லி இருக்க கூடாது ,என் காதலை தவிர வேறு எதுவும் உனக்கு மிக பெரிய சந்தோசத்தை தரப்போவதில்லை என்று. என் உதடுகளுக்கு என்னை விட வேகம் அதிகம், ஆனால் விவேகம் இல்லை அதனால் தான் என் மனதும் உதடும் நடத்திய போரில் என் மனது வென்று உன்னிடம் சமரசம் நடத்தியதோ.. மீண்டும் ஒரு தவம் செய்தாலும் நீ எனக்கு கிடைப்பாய் என யார் எனக்கு உறுதி தரமுடியும்? அதனால் தானடி பெண்ணே இந்த ஜென்மத்தில் நான் செய்த பிழைக்கு ஒரு முறை மட்டும் என்னை மன்னித்து விடு, காலம் முழுவதும் உன்னை இமை மேல் பூத்த பூக்களாய் நான் உன்னிடம் வாசம் வீசுவேன். நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு சொல்ல தெரியவில்லை, வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள். கடலை தேடி நதிகள் செல்கின்றன, போகும் வழியில் அது தாண்டும் தடையை போல் உன் காதலை நான் அடைய நான் தாண்டிய தடைகளில் இதுவும் ஒன்றே ஒன்று. உயிரே என் உதிரமே ... நீ இல்லாத என் மீதமுள்ள வாழ்வில் என்னால் வாழ முடியா...