நான் அவளுக்கு எழுதிய கவிதை.
உலக அதிசயங்கள் எல்லாம் கற்களால் ஆனதடி, இல்லையேல் உன்னையும் அதில் சேர்த்து இருப்பார்கள். உன் முதல் பார்வை என்னை தழுவியபோது என்னுள் உடைந்து நழுவிய உணர்வுக்கு நான் வைத்த பெயர் தான் காதல் . நீ சிரிக்கும் சிரிப்பின் அழகை என்னவென்று சொல்ல, தளும்பி தளும்பி செல்லும் நதியின் ஓசையை கேட்க ஏங்கும் மனதை போல் என் செவிகளுக்கு உன் சிரிப்பை அளி மீண்டும் ஒருமுறை விருந்தளிக்க உன் கண்கள் நூறாயிரம் மின் மினி பூச்சிகள் ஒன்று கூடிய ஒளியை விட மோசமானது. ஆம் அந்த வெளிச்சத்தில் தான் என்னை என் விழியின் பார்வையை பறிகொடுத்தேன். நான் உன்னை நேரில் காணும்போது நீ ஒவ்வொருமுறை அடைகின்ற வெட்கம் எப்படி இருந்தது தெரியுமா? தாமரை தன் கதிரவன் வருகையில் தன் மீது பட்ட ஒளியில் அதன் இதழ்கள் சொல்லியதாம் , ஆம் உன்னவன் உனக்கானவன் வருகை புரிகிறான் நீ நாணத்தில் இதழ்களை மூடிக் கொல் அவனை என்று. இதழ்களை மூடிக் கொல் அவனை என்று. இதழ்களை மூடிக் கொல் அவனை என்று. புரிகிறதா ? ஒவ்வொரு முறையும் உன் வீட்டை கடக்கையில் நீ என்னை பார்க்கும் பார்வை எனக்கு மேலும் மேலும் காதலுக்கு வலிமை சேர்க்கிறது. உன் புன்ன...